முரசொலி நாளிதழின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிருபராக பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் (55). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் நேற்று ஸ்டாலின் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலிருந்ததை இரவு வரை கவரேஜ் செய்தவர் நெல்லையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இரவு பதினோரு மணியளவில், அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நண்பர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சங்கரன்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Advertisment

nellai murasoli reporter passed away dmk mk stalin meet reporter family

இது குறித்து தகவலறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் வந்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் இன்று மதியம், அவரது இல்லத்துக்கு வந்து அமணிகண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் ஊடக நண்பர்கள், நகர மக்கள் மற்றும் தி.மு.க.வினர் திரளாக வந்து மணிகண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.