Skip to main content

கொலையில் முடிந்த கைதிகள் மோதல்! - பாளையங்கோட்டை சிறைத்துறை அலட்சியம்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

NELLAI DISTRICT palayamkottai PRISON INCIDENT

 

நெல்லை மாவட்டம், களக்காடு காவல் நிலைய வழக்கு தொடர்பாக முத்து மனோ என்பவர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் குறிப்பிட்ட பிரிவினரால் அவர் தாக்கப்பட்டார். ஐ கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

 

சிறைத்துறை வட்டாரத்தில் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது “முத்து மனோ தாக்கப்பட்டபோது பகல் மணி 03.45. அந்த நேரத்தில் சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி. ஆகியோர் சிறை வளாகத்தில் இருந்தனர். ஆனாலும், கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில், சிறைகளில் இதுபோன்ற கொலைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

 

மத்திய சிறை ஒன்றில், பிசிபி கேன்டீன் நடத்த ஒரு மாத எக்ஸ்டென்ஷனுக்கு ரூபாய் 5 லட்சம் கமிஷன் வாங்கும் மேலதிகாரி இருக்கிறார். அதனால்தான், சிறையில் 25 ரூபாய் பீடி கட்டுக்கு ரூபாய் 100 விலை வைக்கிறார்கள். இந்த பி.சி.பி. வருமானம், பெட்ரோல் பங்க் வருமானம், கைதிகளுக்கு உணவுப்பொருள் வழங்குவதன் மூலம் கிடைக்கும் மோசடி வருமானம், ஆடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பில் கிடைக்கும் லாபம், கிளைச்சிறைகளில் வசூலிக்கப்படும் மாமூல், சிறை உற்பத்தி பொருட்களில் கொள்ளை, பணியாளர்களுக்கு மெமோ கொடுத்து அதனை கன்சிடர் செய்வதற்காகப் பெறப்படும் லஞ்சம் என அனைத்திலும் பணமே குறிக்கோள் என்று செயல்படும் அதிகாரிகள், கைதிகள் நலனைக் கருத்தில் கொள்ளாததாலேயே, சிறை வளாகத்தில் கொலைகள் நடக்கின்றன. அதே நேரத்தில், அதிகாரிகள் தப்புவதற்கு கடைநிலை ஊழியர்கள் பலியாக்கப்படுகின்றனர்.

 

பாளை. சிறையிலும்கூட, கைதி முத்து மனோவை ஒரு பிரிவினர் ஒன்றுசேர்ந்து அடித்தபோது, காவலர் ஒருவர் தடுத்திருக்கிறார். அப்போது, இன்னொரு பிரிவினர் ‘அவன் சாகட்டும்’ என்று அந்தக் காவலரைப் பிடித்து இழுத்து, கடமையைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அடித்த அடியில், சிறையிலேயே முத்து மனோ செத்துவிட்டார். ஆனாலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது இறந்தார் என்று ‘ரெக்கார்ட்’ செய்துள்ளனர்.

 

சென்னை புழல் சிறையில், கைதிகளான ‘பாக்ஸர்’ முரளி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகள், இப்படித்தான் சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இங்கே பாளை. சிறையில் முத்து மனோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைகளில் கைதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். முறையான விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.” என்றனர் குமுறலாக. 

 

குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் நோக்கமே, தண்டனை காலத்தில் தங்களின் தவறுகளை உணர்ந்து, மனம் திருந்தி, விடுதலையான பிறகு மறுவாழ்வு வாழத்தான்! சிறைகளிலோ, அடிதடியும் கொலைகளும் அல்லவா நடக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.