Skip to main content

அரசு அதிகாரிகளின் பல ஆண்டுகால அலட்சியம்! கருணைக் கொலை செய்ய ஆட்சியரிடம் மனு கொடுத்த முதியவர்! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

The negligence of government officials for many years! The old man who petitioned the Collector

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (13.12.2021) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்தனர். அப்போது அய்யனார் (68) எனும் முதியவர், மாவட்ட ஆட்சியரிடம் தனது மனுவை அளித்தார். அந்த மனுவைப் பிரித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “விழுப்புரம் அருகே உள்ள தென்பேர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நான் வசித்துவந்த வீடு, தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. இருக்க வீடு இல்லாமல் ஆங்காங்கே தங்கி வாழ்க்கை நகர்த்திவருகிறேன். வயது மூப்பின் காரணமாக காது கேட்கவில்லை; கண்பார்வையும் மங்கிவிட்டது. ஆதரவற்ற நிலையில் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன். 

 

எனக்கு அரசு அளிக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நேரில் சென்று முறையிட்டும் சோர்ந்து போய்விட்டேன். இதுவரை அரசு அதிகாரிகள் எனக்கு உதவித்தொகை கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், என்னை கருணைக் கொலை செய்வதற்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அய்யனார் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

அதைப் படித்துப் பார்த்த ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆட்சியர், பெரியவர் அய்யனாருக்கு ஆறுதல் கூறியதோடு, விரைவில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆட்சியரின் வார்த்தையை நம்பிக்கையோடு கேட்டுக்கொண்டு தளர்ந்த நடையுடன் தனது ஊரை நோக்கி சென்றுகொண்டிருந்தார் பெரியவர் அய்யனார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.