Skip to main content

நடராஜர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரு தினங்களில் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் 77 ஆவது சுதந்திர தின நாளில் காலையில் தேசியக்கொடிக்குக் கோவில் தீட்சிதர்கள் கோவில் கருவறையில் பூஜை செய்து மேளதாளம் முழங்க வெள்ளி தாம்பூலத்தில் எடுத்து வந்து 152 அடி உயரமுள்ள கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த பட்டொளி வீசி பறந்தது கோடி.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

என்.எல்.சிக்காக நடராஜர் கோவிலில் ருத்ராபிஷேகமா? ஆர்.எஸ்.எஸ் விளக்கம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Rudrabhishekam at Nataraja temple: RSS organization denies

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்து நடத்திய மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை குறித்து  சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதற்கு மறுத்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில், என்எல்சி இந்தியா நிறுவனம் (NLCIL) 19.11.2023 அன்று சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் ருத்ர அபிஷேக பூஜைக்கு ஏற்பாடு செய்ததாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் மஹா ஜப ருத்ராபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்பாடு செய்தது. இந்த பிரத்தியேகமான பூஜையானது, என்.எல்.சி இந்தியா லிமிடெட் மற்றும் பாரத தேசத்தின் ஒட்டு மொத்த நலன் மற்றும் வளர்ச்சிக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த பூஜை, முழுக்க என்எல்சிஐஎல் மற்றும் தேசிய நலன் கருதியதாகவும் இருந்ததால், என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்கள், என்.எல்.சி.ஐ.எல்-ன் மற்ற மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்குமாறு எங்கள் சேவா சங்கம் கேட்டுக் கொண்டிருந்ததின் பேரில் பங்கேற்றனர்.

 

nn

 

பூஜைக்கான முழுச் செலவையும் நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கத்தின் அமைப்பு மட்டுமே ஏற்றுக்கொண்டது என்று நெய்வேலி ராமகிருஷ்ண சேவா சங்கம் மேலும் தெளிவுபடுத்துகிறது. இது போன்ற செய்திகளை, அடிப்படை உண்மைகளை சரிபார்க்காமல் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் என்.எல்.சி.ஐஎல் மீது தவறான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம், கடந்த 18 ஆண்டுகளாக ஆன்மீக மற்றும் சமுதாயம் சார்ந்த சேவைகளில் திறம்பட செயலாற்றி வருகிறது. வருடாந்திர மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் சமுதாய வளர்ச்சி சார்ந்த சேவைகளை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தர் மகராஜ் மற்றும் சுவாமி அசோக் மகராஜ் ஆகியோர் நல்லாசி மற்றும் முன்னிலையில் மஹா ஜப ருத்ர அபிஷேக பூஜை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நடராஜர் கோவிலில் என்எல்சி சேர்மனிடம் பல லட்சங்களைப் பெற்று பூஜைகள்? நிர்வாகம் மறுப்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் கோவிலில் முக்கிய வழியாகக் கருதப்படும் கீழகோபுரத்தில் இருந்து செல்லும் 21 படிகட்டு வழியில் பக்தர்கள் செல்லும் பாதையை அடைத்து நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி குடும்பத்தினருக்கு, கோவில் தீட்சிதர்கள் பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ருத்ரா அபிஷேக பூஜைகள் செய்துள்ளனர். இது தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில் இது குறித்து கோவில் தீட்சிதர்களிடம் விசாரித்த போது இதுபோன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்தான். நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் போது இந்த இடங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறும். சமீபத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு இதே போன்று அதே இடத்தில் ருத்ரா அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இது ஒன்றும் விதிமீறல் அல்ல, பூஜைக்கு உரிய பணத்தை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தினால், யாருக்கு வேண்டுமானாலும் இதே இடத்தில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் என்று கூறுகின்றனர்.

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

இதுகுறித்து என்எல்சி மக்கள் தொடர்பு அலுவலர் காதர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைக் கூறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபிறகு மகிழ்ச்சி அடைகிறார்கள். சேர்மன் கோவிலில் நடைபெற்ற ருத்ர அபிஷேக பூஜையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆனால் இவர் பணம் எதுவும் செலவு செய்யவில்லை. வேறு அமைப்பு இதனைச் செய்திருந்தார்கள். இதில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 

இவர் சேர்மன் என்பதால் வெளியில் தெரிகிறது. அங்கு மற்றவர்களும் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். எனவே திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புவதாகக் கூறினார். இவர் ஆன்மீக பக்தர் திருப்பதி உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு கோவிலுக்குச் செல்வார். என்எல்சி நிர்வாக சேர்மன் என்பதால் சிறப்பு செய்வார்கள். இதனை பிடிக்காதவர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்