அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு புற்று மண் குளியல், கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் செயலாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
புற்று மண் குளியல் செய்யும் முறையைப் பற்றி கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் கூறுகையில், "புற்று மண் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இன்றளவும் குழந்தைகளுக்கு தோலில் சிவப்பாக தடிப்பு போலவும் அடிக்கடி புண் வரும் போது குயவர்களிடத்தில் சென்று மண்ணால் எழுதுவது என்ற சிகிச்சை முறை தொன்று தொட்டு இருந்து வருகிறது. மண்ணால் உடலில் பூசி விடுவார்கள் பிறகு குழந்தைகளுக்கு அக்கி என்று சொல்லக்கூடிய இருந்த நாள்பட்ட சிரங்கு, படை போன்ற நோய்கள் உடலில் உண்டாகும். இதனை ஆங்கில மருத்துவத்தில் தீர்க்க முடியாது காரணம் ஆங்கில மருந்து மாத்திரைகள் கெமிக்கல் மூலம் தயாரிக்கப்பட்டவை. இவை சாப்பிடும் போது உடலில் அதிக சூடு ஏற்படும் அதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட அக்கி என்று சொல்லக்கூடிய நோய்கள் மேலும் அதிகரிக்கும் தீராது.
எனவேதான் கிராமப்புறங்களில் இன்றளவும் குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு ஏற்படும் இந்த அக்கி என்ற நோய்க்கு மண்பாண்ட குயவர்களிடம் சென்று இந்த புற்றுக் கரைசல் மண்ணை ஒரு குச்சியால் தொட்டு சிவந்து உள்ள இடங்களில் வளைவு வளைவாக எழுதுவார்கள் இப்படி எழுதுவதன் மூலம் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு நோய் தீருவதை கண்கூடாக பார்க்கின்றோம். பார்க்க முடியும். அதே போல புற்று மண்ணை எடுத்து தூசு துப்பு இல்லாமல் சலித்து பாதுகாப்பாக வைத்து கொண்டு தேவை ஏற்படும் போது முதல் நாள் இரவே புற்றிலிருந்து எடுத்த மேல் மண்ணை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். பின்னர் அடுத்த நாள் காலையில் 8 மணியிலிருந்து 10 மணிக்குள் இளம் வெயிலில் தலை முதல் பாதம் வரை உடலில் பூசி வெயிலில் நிற்க நன்றாக காய்ந்து உலர்ந்த பின்னர் ஆறுகளிலோ குளங்களிலோ ஏரிகளிலோ அல்லது கிணற்று நீரிலோ குளிக்க உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
மண் குளியல் செய்த அன்று எளிய உணவுகளை உண்ண வேண்டும். நல்ல உறக்கம் வரும். மேலும் ரத்த ஓட்டத்தில் தடை இருந்தால் அதனை போக்கி நல்ல ரத்தம் ஓடும். நல்ல பசி எடுக்கும் நாள்பட்ட கால் வலி தீரும். இயற்கையான நோய் தீர்க்கும் சிகிச்சை முறை இது பக்கவிளைவுகளற்றது. இந்த சிகிச்சையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். செல்போன் பயன்பாட்டால் வரும் உடல் சூட்டைத் தணிக்கும் கோடை காலத்தில் அனைவரும் செய்து கொள்ள உடலில் தேங்கிய நாள்பட்ட கழிவுகள் நீங்கும்" என்கிறார் தங்க சண்முகசுந்தரம்.