முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னுடைய மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஒரு மாத காலம் பரோலில் வெளியே வந்து வேலூரில் தங்கி உள்ளார்.

Advertisment

n

15 தினங்களுக்கு ஒருமுறை சிறையில் உள்ள தன் கணவரை சந்திக்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதிபெற்று, அதன்படி சந்தித்து வருகிறார். ஆகஸ்ட் 13 ந்தேதி காலை, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சந்திக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு சென்று காத்திருந்தார். பின்னர் முருகனை சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார்.

Advertisment

இச்சந்திப்பின்போது, மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். முருகனின்விருப்பத்தை அறிவதற்காக மணமகன் போட்டோக்களை அவரிடம் காட்டியுள்ளார் நளினி.