நமது நக்கீரன் ஆசிரியரின் இரண்டாவது புதல்வி ஆர்.வி.ஷாருமதி, தனது ஐந்து வருட சட்டப்படிப்பை முடித்து ஜனவரி 04ஆம் தேதி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியை பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் சி.ராஜ்குமார் தலைமைதாங்க, உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் முன்மொழிய மூத்த வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் வழிமொழிந்து அனைவருக்கும் உறுதிமொழி பிரமாணம் செய்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். புதிதாக பதிவுசெய்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாழ்த்து தெரிவித்து உற்சாகமூட்டினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி நளினி, வழக்கறிஞர்கள் பவானி ப.மோகன் மற்றும் பாவேந்தன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு உறுப்பினர் அமல்ராஜ் ஆகியோர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் ஆர்.வி.ஷாருமதியை வாழ்த்தினர்.