Skip to main content

அரசு விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தில் நாட்டுபசுக்கள் மட்டுமே வழங்க வேண்டும்: ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தல்

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
naga


அரசு விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தில் நாட்டுபசுக்கள் மட்டுமே வழங்க வேண்டும் என பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை வடக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 2-ம் தேதி பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. ராஜராஜன் உலகமகாதேவியார் சிலையை மீட்டெடுத்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டு, தமிழக அரசு அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை சுல்தான்பேட்டை வரை நீடிக்க வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிதி ஒதுக்கி உடனே துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களோடு மே 26 முதல் ஜூன் 11 வரை மத்திய அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை மக்களிடம் விளக்க விரிவான ஏற்பாடு செய்வது தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம், சர்வதேச யோகா தினம், ஒரேநாடு சந்தா சேகரிப்பு, ஷியாம் பிரசாத் நினைவு தினம், பத்திரிக்கையாளர் சந்திப்பு, அறிவுசார் வல்லுநர்களுடன் சந்திப்பு, சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி, மலைவாழ் மக்களுடன் சந்திப்பு, தூய்மை இந்தியா, முக்கியப் பிரமுகர்களுடன் சந்திப்பு, வாக்குச்சாவடி வாரியாக 50 பேரை தொடர்புகொள்ளுதல், நரேந்திரமோடி செயலி பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை மக்களிடம் எடுத்துச்செல்வதுபற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் மோகன் மந்திராச்சலம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோட்ட இணை பொறுப்பாளர் பாயின்ட் மணி, சதீஷ்குமார்,மாவட்ட பொதுச்செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

சார்ந்த செய்திகள்