ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. கொலைக்கு காரணமான 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nedur.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது நீடூர். அங்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு அவரது மகன் பிரகாஷ் சொந்தமாக லாரி வைத்து மணல் லோடு ஓட்டுகின்றனர். பிரகாஷிடம் அதே பகுதியில் காமராஜர் காலனியை சேர்ந்த தினேஷ் என்பவன் வேலை பார்த்து வருகிறான். தினேஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக கடந்த மாதம் 18 ம் தேதி இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. அந்தகலவரத்தில் முருகையன் தரப்பினரான தினேஷ் மற்றும் பிரகாஷையும் அடித்து துவைத்தனர். இவ்விவகாரத்தில் தலையிட்ட போலீசார் இரு தரப்பிலும் தலா 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறையில் இருந்த 4 பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளியில் வந்தனர்.
இந்த நிலையில் பிரகாஷ் உள்ளிட்ட 10 பேர் நேற்று இரவு 9 மணி அளவில் அங்குள்ள மகா மாரியம்மன் கோவிலில் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே அடிபட்ட முருகையன் தரப்பினர், சிலரை சேர்த்துக்கொண்டு, 20க்கும் மேற்பட்டோரோடு மிகப்பெரிய அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் வந்தனர். அங்கிருந்த 10 பேரையும் முற்றுகையிட்டனர். அதை சிறிதும் ஏதிர்ப்பார்த்திடாத அவர்கள் தப்பித்து நாளாபுறமும் தலைதெறிக்க ஓடினர். ஆனால் அவர்களை விடாமல், விரட்டி, விரட்டி கொடூரமான ஆயுதங்களால், வெட்டியும், குத்தியும் தாக்குதலை நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கொலைவெறித்தாக்குதல் நடத்திய முருகையன் ஆதரவாளர்கள், பத்துபேரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகினர். இந்த கொடூர தாக்குதலில், பிரபாகரன் பிரேம்குமார் ,பிரகாஷ் ,இளங்கோவன் , இளவரசன், இளையராஜா, எழிலரசன், சாமிக்கண்ணு, சம்மந்தம், தங்கமணி சுவாமினாதன், உள்ளிட்ட பத்துப்பேருக்கும் தலை கை கால் உட்பட பல இடங்களில் வெட்டு விழுந்திருந்தது, உயிருக்கு போராடியவர்களை 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியில் தங்கமணி, இளவரசன் ஆகிய இருவரும் இறந்தனர். மீதமுள்ள எட்டு பேருக்கும் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறுகின்றனர்.
இது குறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் தாக்குதல் நடத்தியவர்களை தேடிவருகின்றனர். அதில் திருமுருகன், வினோத், கஜேந்திரன், மான்சிங், கிருஷ்ணமூர்த்தி, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடிவருகின்றனர்.
ஒரு சமுகத்தை சேர்ந்தவர்கள் முன்பகையால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தால் நீடூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)