Skip to main content

நடிகர்சங்க சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு! -தள்ளுபடி செய்ய அரசுத்தரப்பு பதில் மனு!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 

sandy

 

 

நடிகர் சங்க நிர்வாகப் பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம், பொருளாளர்  நடிகர் கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல்  செய்தார். 

அந்த மனுவில், ‘தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிப்படி, சங்கத்தின் பொதுச்செயலாளர் மட்டுமே வழக்கு தொடர முடியும். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியே பதிவு காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர்,  பொருளாராக இருந்த கார்த்தி ஆகியோர், சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க எந்தக் குழுவும் இல்லாததால் சிறப்பு அதிகாரி ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர்கள் அளித்த விளக்கத்தில் நடிகர் சங்க வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ, அல்லது ஓராண்டிற்கோ சிறப்பு அதிகாரியை நியமிப்பது என அரசு உத்தரவிட்டது. எனவே, நடிகர் கார்த்தி மற்றும் நாசர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கின் விசாரணையை நீதிபதி கல்யாண சுந்தரம் வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காமராஜ் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Madras HC Question What action was taken  complaint against Kamaraj

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர். காமராஜ் விநியோக திட்ட உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காமராஜ் தொடர்பான புகார் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் இன்னும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 17 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

5 கூடுதல் நிரந்தர நீதிபதிகள்; குடியரசுத் தலைவர் நியமனம்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

5 Additional Judges to Madras High Court; Appointment of the President

 

அண்மையில் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் அறிவிப்பின்படி சென்னை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஏ.ஏ. நக்கீரன், என். மாலா, எஸ். சௌந்தர், சுந்தர்மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.