Skip to main content

இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர் - போலீஸார் விசாரணை

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Mysterious person who stole a two-wheeler - Police investigation

 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜய். இவர் வழக்கம்போல் தனது இரு சக்கர வாகனத்தை இன்று (03.02.2021) வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

 

அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் ஒருவர், சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டமிட்டு, திடீரென தனது கையில் வைத்திருந்த சாவியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கை திறந்துள்ளார். திறந்தவுடன் மீண்டும் சாலையில் ஆள் நடமாட்டத்தைப் பார்த்த பின்பு, மெதுவாக இரு சக்கர வாகனத்தை சிறிது தூரத்திற்குத் தள்ளி சென்றுள்ளார்.

 

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதையடுத்து, அஜய்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைக்கடைக்குள் புகுந்து ரூ.1.50 கோடி நகை கொள்ளை; புகைப்படங்கள் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Photos publised broke into a jewelery shop and stole Rs 1.50 crore worth of jewellery

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்” என்று கூறினார். 

Next Story

ஹெல்மெட்டை திருடிய சிறப்பு எஸ்.ஐ

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

The special SI who stole the helmet in chennai

 

சென்னை எழும்பூர் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு சத்ய நாராயணன் என்பவர் உணவு சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் (11-10-23) வந்துள்ளார். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தை ஹோட்டல் பார்க்கிங் நிறுத்தத்தில் நிறுத்தி, அதில் தனது ஹெல்மெட்டை வைத்து விட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். 

 

அதன் பிறகு, சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தனது ஹெல்மெட் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகமும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், காக்கி சட்டை அணிந்திருந்த போலீஸார் ஒருவர் ஹெல்மெட்டை திருடிய காட்சி பதிவாகியிருந்தது. 

 

மேலும், காவல்துறையினர் விசாரணையில், எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயன் என்பவர் தான் ஹெல்மெட்டை திருடியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட்டை திருடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.