Skip to main content

'கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக என் பணி தொடரும்'- கு.க.செல்வம் அறிவிப்பு 

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 'My work as a non-party MLA will continue' - KK Selvam announcement

 

 

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அண்மையில் டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம், தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. 

 

இதற்கு  எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பதில் கடிதம் ஒன்றை அளித்தார். அதில்,  சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள். இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம்  அளித்திருந்த நிலையில், நேற்று திமுகவிலிருந்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வம் உரிய விளக்கம் தராததால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் திமுகவின் அனைத்து அடிப்படை பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், கட்சி சார்பின்றி இனி எம்.எல்.ஏ பணி ஆற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அன்னியூர் சிவா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Anniyur Siva sworn in as a member of the Legislative Assembly

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி (13.07.2024) எண்ணப்பட்டன. இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுகவின் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.வாக இன்று (16.07.2024)  பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

Next Story

'சண்டாளர் சர்ச்சை' - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'Sandalar Dispute'-Recommendation by Tribal Commission to Tamil Govt

சண்டாளர் என்ற சமூக பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய பரிந்துரை அளித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் இனத்தவர்களின் பெயர்களை இழிவான முறையில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் 'சண்டாளர்' என்ற  வகுப்பைச் சேர்ந்த பெயரில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் அட்டவணையில் 48 வது இடத்தில் இந்தச் 'சண்டாளர்' என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளது.

இப்பெயரை பொதுவெளியில் நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கிலோ இனி அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சித்து பாடல் ஒன்றைப் பாடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் இதனைப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.