Music composer Vijay Antony's daughter incident

Advertisment

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா (வயது 16). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர், அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது.பின்னர் அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.