சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை தமிழக அரசு விரைவில் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

mukilan

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,முகிலன் காணாமல்போய் 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அவரை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி வரும் மார்ச் 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும். இந்த விஷயத்தில் தமிழக அரசும், காவல்துறையும் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லக்கண்ணு, மகேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவைச் சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, இயக்குநர்கள் அமீர், கௌதமன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர்.