Skip to main content

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு எம்.பி. ஒபிஆர்  மனு!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் குமார் அரசியலில் குதித்ததை தொடர்ந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிடும் கூட எம்பி ரவீந்திரநாத் குமார் தவிர மற்ற அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.

இப்படி அதிமுகவில் ஒரே ஒரு எம்பி ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதின் மூலம் பாராளுமன்ற குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர் அது கடைசி நேரத்தில் கைநழுவி போய் விட்டது.

 

 MP OPR asking for a gun license petition!


அப்படி இருந்தும் கூட தொடர்ந்து மோடிக்கு ஆதரவாக அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதோடு முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவாகவும், குடி உரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். இதனால் முஸ்லீம் அமைப்புகள் உள்பட எதிர்க் கட்சிகள் மத்தியில் ஒருஅதிருப்தி  அலையும் ஒபிஆர் மேல் பரவலாக வீசி வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஒபிஆர் மீது முஸ்லீம் அமைப்பினர் சிலர் அவர் காரை தாக்கவும் முயன்றனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தொகுதிக்கு செல்லும்போது எல்லாம் எம்.பி.ஒபிஆர் பலத்த பாதுகாப்புடன் சென்று வருகிறார்.

ஆனால் அரசியல்வாதிகளும், விஐபிகளும் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வைத்துக் கொள்வது வழக்கம் அதுபோல் எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் மனு கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவியும் எம்.பி. ஒபிஆர் மனுவை ஆய்வு செய்து வருகிறார். அதன் மூலம் கூடிய விரைவில் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ்சும் எம்.பி.ஓபிஆர்க்கு கிடைக்கபோகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓகே சொன்ன ஓ.பி.ஆர்?; ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024

 

OK said OPR?; OPS supporters are disgruntled

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜக இடையே மூன்று முறை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து இதற்காக எவ்வளவு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், ஒரே முடிவாக தேர்தலை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு 'அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம்' என நடத்திவரும் நிலையில் ஒருவேளை பாஜகவின் நிபந்தனைப்படி தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதன் பிறகு அதிமுக மற்றும் இரட்டை இலை ஆகியவைக்கு ஓபிஎஸ் உரிமைகோர முடியாது என்பதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் வதந்தி என ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் எந்த சின்னத்தில் போட்டி என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜே.சி.டி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பது தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஓ.பி.ஆரின் இந்த முடிவுக்கு பின், இரவோடு இரவாக சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எஞ்சிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என ஓபிஎஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story

வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கிச் சூடு; தாம்பரம் அருகே பரபரப்பு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Shooting at lawyer's house; Bustle near Tambaram

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.

வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்த வந்த குண்டு எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வழக்கறிஞர் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கறிஞர் என்பதால் வழக்குகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இவ்வாறு நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.