
ராஜபாளையத்தில் தனது இரு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகிலுள்ள தேவதானத்தில் வசித்து வரும் முத்துக்குமார் – ராமுத்தாய் தம்பதியினருக்கு 6 மற்றும் 3 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்குமாரும் ராமுத்தாயும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வர். இந்நிலையில் கணவன் முத்துக்குமார் மீதான கோபத்தில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து ராமுத்தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினரின் தேடுதலில் மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.