modi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தற்போது விமானத்தின் மூலம் கோவை வந்துள்ளார் மோடி. ஆந்திரா விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் க்கு புறப்பட்டு செல்ல உள்ளார் பிரதமர் மோடி.

இன்று திருப்பூரில் நடக்கவிருக்கும் அரசு மற்றும் கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தற்போது கோவை விமான நிலையம் வந்து விட்டார்.அவரை வரவேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி, எம்பி மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அவரை வரவேற்க வருகை தந்துள்ளனர்