Moderate rain with thunder during next 3 hours; Meteorological Center information

சென்னையில் கடந்த ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் முதல் வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே அனல் காற்று வீசி வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில்இன்று வெப்ப சலனம் காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

Advertisment

இந்நிலையில் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். மார்ச் 20 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை மழைக்கு பெய்யும்என அறிவிக்கப்பட்டுள்ளது.