Skip to main content

செல்ஃபோன் இணைப்பு சரிவர கிடைக்காததால் அல்லாடும் வடலூர் சுற்று வட்டார மக்கள்! 

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர், மாவட்டத்தின் மையப்பகுதியிலுள்ள ஊர். வள்ளலாரின் அருட்சபை உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய ஊர்.
 

vadalur


வடலூரை சுற்றியுள்ள ராகவேந்திரா சிட்டி,  ஆபத்தானபுரம்,  சேராக்குப்பம்,  கன்னியாகோவில் உள்ளிட்ட  பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாக எந்தவிதமான செல்போன் இணைப்புகளும் சரிவர இயங்குவதில்லை. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,  ஜியோ, வோடபோன் ஆகியவற்றிற்கு டவர்கள் இருந்தும் செல்ஃபோன்கள்  பேசிக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி இணைப்பு துண்டாகிறது.

இதனால்  வடலூர் பகுதிகளில் விபத்து ஏற்பட்டால்கூட  முதலுதவிக்கு 108 ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு  இயலவில்லை என்றும், திருட்டு சம்பவம் நடைபெற்றால்கூட காவல்துறையை உதவிக்கு அழைக்க முடியவில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள் அதேசமயம் செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணுவதற்கு மாதத்திற்கு 100 முதல் 500 வரை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், செல்ஃபோன் டவர் சரியாக கிடைக்கிறதா என கண்காணிப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மக்களிடமிருந்து பணத்தை பெறும் நிறுவனங்கள்  செல்ஃபோன் இணைப்பு சேவையை முழுமையாக வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

பப்ஜி கேமில் மூழ்கிய இளைஞர்; தாய் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Youth immersed in pubg game; A sad decision taken because of mother's reprimand

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.