MLA who fulfilled the demand of the people of the constituency!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கான பொது கழிப்பிட வசதி இல்லாததால் அவர்கள் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடமும், கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான இனிகோ இருதயராஜிடமும் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 31வது வார்டில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக ஒரு நவீன பொது கழிப்பிடத்தை கட்டி அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வந்துள்ளனர்.

Advertisment

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், இந்த நவீன பொது கழிப்பிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.