திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவை ஆஜர்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

மு.க.முத்துவின் இரண்டாவது மனைவியின் மகள் என ஷீபா ராணி தொடர்ந்த ஆட்கொனார்வு மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக தந்தையை பார்க்க முடியவில்லை என்றும், முதல் மனைவியின் மகன் அறிவுநிதியின் கட்டுபாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தந்தையை சந்திக்கவிடாமல் தன்னையும், தன் தாயையும் ரவுடிகளை வைத்து அருள்நிதி மிரட்டுவதாகவும், காவல்துறை தன்னை விசாரித்தபோது முறையாக கொள்ளவில்லை எனவும் ஷீபாராணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மு.க.முத்து சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஷீபாராணியின் தாயாரை இசை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து பேசியுள்ளதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்துகொண்டது, ஷீபா தன் மகள் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தும் மு.க.முத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஷீபா ரானியின் மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த ஷீபாராணி, தான் முத்துவின் மகள் என்றும், டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் முறையிட்டார். அவரது முறையீட்டை உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க அறிவுறுத்தினர்.