Skip to main content

காணாமல் போன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!  

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Missing Tamil Bible found in London!

 

தஞ்சையில் இருந்து காணாமல் போன தமிழில் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

ஜெர்மனி நாட்டில் பிறந்த சீகன் பால் என்பவர், கடந்த 1706- ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் கிறிஸ்துவ மத போதகராகப் பணியாற்றினார். இவர் பைபிளின் புதிய அத்தியாயத்தை 1715- ஆம் ஆண்டு தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிள், அப்போதைய சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக கடந்த 2005- ஆம் ஆண்டு அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இந்த நிலையில், திருடுபோன பைபிள் கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டன் நிறுவனத்திடம் உள்ளதாக வலைத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரின் புலனாய்வு விசாரணையில், தஞ்சை அருங்காட்சியகத்தில் திருடப்பட்டது உறுதியானது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் இந்த பைபிளை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக போலீசார் யாருடைய ஏஜென்ட்? - நீதிமன்றம் கேள்வி

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 'Whose agent are the Tamilnadu police'-Court asks

 

மதுவிலக்கு கொள்கை பிரச்சாரம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வேண்டும் என பாமக சார்பில் ராணிப்பேட்டை காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 

யாருக்காக காவல்துறையினர் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆகியவை சோதனைக்கு வந்தால் மத்திய அரசின் ஏஜென்ட்கள் எனக் குற்றம் சாட்டும் பொழுது தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்டாக செயல்படுகிறது என்றும் வினவினார்.

 

ராணிப்பேட்டையில் பாமகவின் மதுவிலக்கு கொள்கை பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

 

Next Story

'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி' - சென்னை காவல்துறை எச்சரிக்கை

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

n

 

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும்; சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும், வெடிக்கப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ/வெடிப்பதோ கூடாது; பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்; பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளிடம் தனியாக பட்டாசு வெடிகளை கொடுத்து வெடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் தீபாவளியன்று சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.