Skip to main content

திருச்சியில் மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!! பார்வையிட குவியும் மக்கள் கூட்டம்

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நன்னிலம்பட்டி என்ற இடத்தில்  கோவிந்தன் என்ற விவசாயி ஒருவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.அவரது பட்டியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது அதில் ஒரு குட்டி பார்ப்பதற்கு மனித உருவில் இருந்தது. 

 

medi

 

medi

 

medi

 

 

 

அந்த ஆட்டுக்குட்டி கிட்டத்தட்ட மனித உருவில் பிறந்துள்ளது ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே அது இறந்துவிட்டது. மேலும் இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கரு முழுவளர்ச்சி அடையாததால் இப்படி பிறந்துள்ளது என கூறினர்.இந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு பரவ எல்லா பகுதியில் உள்ள மக்களும் அந்த ஆட்டை பார்க்கவந்தனர் இதனால் அந்த விவசாயி கோவிந்தனின் வீட்டின்முன் கூட்டம் கூடியது.    

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கிய எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
A trust provided air conditioning machine to a government hospital

எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரத்தில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் சோர்வு அடையாமல் இருக்க ஒரு லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள மூன்று குளிர்சாதன பெட்டிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்டது.

சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்ட குளிர்சாதன பெட்டிகளை பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் இயக்கி வைத்தனர்.

பின்னர் இது குறித்து மருத்துவ மகேந்திரன் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் வருகின்றனர். இவர்கள் சோர்வுடன் வருவதை கண்ட எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் குளிர்சாதன பெட்டிகளை வழங்கி உள்ளனர். மேலும் தேவையான உதவி செய்வதாக தெரிவித்த அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர் லியோ ஆகாஷ் ராஜ் பேசுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவதும், அவர்கள் புழுக்கத்தால் சோர்வு அடைவதையும் எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிந்து எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  உதவியுடன் குளிர்சாதன பெட்டிகளை வழங்கியதாக தெரிவித்தார்.

இதில் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

போலீசார் தாக்கியதால் காயம்; மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு 

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Ordered to submit medical report of Pandian who was injured  by police

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் சரகத்தில் கடந்த மாதம் 9 ந் தேதி ஒரு மூதாட்டியை தாக்கி நகை பறித்துச் சென்றதாக வந்த புகாரையடுத்து சந்தேக நபராக கூறப்பட்ட ரவி மகன் பாண்டியன்(18) மற்றும் அவரது 17 வயது நண்பன் ஆகியோரை 10 ந் தேதி விசாரனைக்காக அழைத்துச் சென்று 16 ந் தேதி ஆலங்குடியில் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவனை ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் விடப்பட்டார்.

அதே போல 18 ந் தேதி கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழமஞ்சக்குடி கிராமம் கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே 1 கிலோ 150 கிராம்  கஞ்சாவுடன் பைக்கில் வந்த போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக பாண்டியனை கைது செய்தனர். மேலும், பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போது உடலில் காயங்களுடன் இருந்ததாக வாக்குமூலம் பதிவு செய்து மணமேல்குடி மருத்துவமனையில் காண்பித்து மருத்துவச் சான்று பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு வலிக்கிறது என்று பாண்டியன் கதறியதால் உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு பாண்டியனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பகுதியில் உள்ள புண்களும் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டியன் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போலீசார் தாக்கியதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டியனுக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கவும், மாற்று விசாரணை கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு வெள்ளிக்கிழமை(5.7.2024) விசாரணைக்கு வந்த நிலையில் பாண்டியனின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றிய மருத்துவ அறிக்கையை வரும் 10 ந் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், போலீசார் தரப்பில் கவுண்டர் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.