Skip to main content

அமைச்சர் தொகுதியில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் விற்பனை 

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
th

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணியின் தொகுதி. இங்கு கடந்த 5 ந் தேதி தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதில் "குமாரபாளையம் தொகுதி முழுக்க குறிப்பாக நகரத்தில் 24 மணிநேரமும் மதுபானம் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 
தடைசெய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போதை மாத்திரை, பான்மசாலா போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்றச்செயல்கள் பல்கிபெருகி விட்டது. இதை  பலமுறை காவல்துறையிடம் தெரிவித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் துணையுடனே இந்த சட்டவிரோத செயல்கள் நடக்கிறது. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றினார்கள். மேலும் இந்த சட்டவிரோத விற்பனையை தடுக்க கோரி இன்று குமாரபாளையம் நகர திமுக,, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய முஸ்லீம்லீக், கொ.ம.தே.க, திராவிடர்கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர்,


டாஸ்மாக் மேலாளர், கோட்டாட்சியர், காவல் துணைக்கண்காணிப்பாளர், வட்டாட்சியர் மற்றும் அனைத்து உயரதிகரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. வருகிற  பத்து நாட்களுக்குள் இந்த சட்டவிரோத விற்பனைகளை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லாத பட்சத்தில் நகரில் உள்ள அனைத்துகட்சியினர், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம்  நடத்தப்படுமென மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்