Skip to main content

கரோனாவால் மூடப்பட்ட கோவில்கள் திறப்பு… ஆய்வு செய்த அமைச்சர்!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

Minister who inspected the opening of temples closed by Corona.

 

கரோனா பரவலால் மக்களைப் பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. சுமார் 165 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் அனைத்து கோயில்களும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்கள் திறக்கப்பட்டாலும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம், கைகழுவுதல், அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதம் ( குங்குமம், திருநீறு ) போன்றவைகளை கைகளால் எடுத்துத் தரக்கூடாது, பக்தர்கள் தேங்காய், பழம் வாங்கிச் சென்று அர்ச்சனை செய்யக்கூடாது, சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு ஆன்லைன் வழியாகவும் தரிசன டிக்கட் பெற்று தரிசனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடன் இருந்தார்.

 

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு மதிய நேரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் மூடப்பட்டதால் அன்னதானம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கோவில் திறக்கப்பட்டதோடு, பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் பார்சல் மூலம் உணவை வழங்குவதை தொடங்கியுள்ளனர். அதன்படி தரிசனம் முடிந்து வெளியே செல்லும் வழியில் வைத்து 400 பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்குகின்றனர், அதனை ஆய்வு செய்தார்.

 

Ad

 

கோவில் பகுதி முழுவதும் சுற்றிவந்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறதா, அதற்கான ஊழியர்கள் யார், யார் என்பனவற்றை கேட்டு தெரிந்துகொண்டு பக்தர்களுக்குச் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்திச் சென்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.