Skip to main content

கூட்டத்தில் காய்ச்சல் இருப்பவரை தனியாக கண்டறியும் கேமரா! புதிய செயலியை துவக்கிவைத்த அமைச்சர் வேலுமணி!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

கோவை ஶ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நியூநெட்ஸ் டெக்னாலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து சிசிடிவி கேமரா மற்றும் மொபைல் கேமரா வழியாக, காய்ச்சலை கண்டறியும் 'தெர்மல் செயலி'யை  அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தொழில் நுட்ப வசதியை தமிழக  உள்ளாட்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

  Minister Velumani launches new app



இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து நியூநெட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜெய் கீர்த்தி கூறுகையில், “அதிகம் பேர் ஒன்று கூடும் இடங்களில் தனித்தனியாக காய்ச்சல் பாதித்தவரைக் கண்டறியும் முறை அதிக நேரம் எடுக்கும். மேலும், மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக ரிஸ்க்கும் உண்டு. எனவே, இந்த புதிய தொழில்நுட்பம் காய்ச்சலைக் கண்டறிய உதவியாக இருக்கும். சிசிடிவி தெர்மல் ஸ்கேனிங் போன்ற பெரிய கருவிகளின் வழியாக ஒரு விநாடிக்கு 15 முதல் 20 பேரின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து, கூட்டமாக இருக்கும் பகுதியில் காய்ச்சல் இருப்பவரைக் கண்டறிய முடியும். அவரைப் புகைப்படம் எடுத்து, சர்வரிலும் சேமிக்கலாம்.
 

 nakkheeran app



மேலும், அவர் நடமாடிய பகுதியில் இருந்த மற்ற நபர்களைக் கண்டறிந்து, பரிசோதித்து, தனிமைப்படுத்த முடியும். மொபைல் கேமரா தெர்மல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் விநாடிக்கு 3 பேர் வரை பரிசோதிக்க முடியும். ‘ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்’ (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படுகிறது” என்கிறார் ஜெய் கீர்த்தி .  கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், அதன் தாக்கத்தை அறியவும், அதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கவும் பலர் முயற்சிக்கிற இவ்வேளையில், இது போன்ற புதிய செயலி தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரிய வரப்பிரசாதம்!

 

சார்ந்த செய்திகள்