Skip to main content

திமுக மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 Minister Udhayanidhi gave award of money to senior DMK officials

 

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான விழா நடைபெற்று வருகிறது. அதன்படி தி.மு.க. ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து பொற்கிழி வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளையில் நேற்று(21.11.203) காலை நடந்தது. இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. 

 

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கோயம்புத்தூரில் இருந்து காரில் பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை சுங்கச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக அமைச்சர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா நடைபெறும் பந்தலுக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அவர் ஆர்வமுடன் பார்வையிட்டார். விழா பந்தலில் இருந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இதையடுத்து ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியை அமைச்சர் உதயநிதி  வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட தி.முக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்தும் நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். 

 

இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி பெருந்துறை சிப்காட் பகுதிக்கு சென்றார். அங்கு ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ. பிரகாஷ், திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம், திமுக இளைஞரணி ஈரோடு மாநகர துணை அமைப்பாளர் சீனிவாசன், டி.என். பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.சிவபாலன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சித்தோடு சி. எஸ். பிரகாஷ், ஒன்றிய கழகச் செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்ற 3 இடங்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் 6 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு 20 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு சோதனை குழுவினரும் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விரைவில் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' - தமிழக முதல்வர் பேச்சு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
'Stalin's Voice at Home' Project - Tamil Nadu Chief Minister's Speech

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''மக்களவைத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்குத் தெரியும். 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை குழுவிற்கு வந்துள்ளது. வரும் பிப்ரவரி 26 முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பிக்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை திமுகவிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களைத் தேடி தி.மு.க; அதிகாரிகளைத் தேடி அ.தி.மு.க - சூடு பிடிக்கும் பாராளுமன்றத் தேர்தல் களம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மக்களைத் தேடி பேரூராட்சி என்று திட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கே.கே நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள் திமுகவினர் குறை கேட்கச் சென்ற மறுநாளே 26 இடங்களில் பளிச்சென விளக்கு எரியத் தொடங்கியது. இந்த விஷயம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் வேகம் காட்டி வருகின்றனர். சுதாரித்துக் கொண்ட அதிமுகவினர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அதிகாரிகளை தேடி அதிமுக என்ற திட்டத்துடன் வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அது சார்ந்த பொதுமக்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளை தேடிச் சென்று மனு கொடுக்கும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.

AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

காந்திநகர் பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் குறைந்த கிலோ வாட் டிரான்ஸ்பார்மரை அதிக கிலோ வாட் ட்ரான்ஸ்ஃபராக மாற்றி அமைத்து தர வேண்டும் என நகர அதிமுக நகர சிறுபான்மையின் அணி அமைப்பாளர் நாகூர் கனி தலைமையிலான அதிமுகவினர் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்களை நேரடியாக சந்திக்கும்போது எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தங்களை தயார்படுத்தி வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.