Skip to main content

“இந்திய வரலாறு தென்கோடி பரப்பிலிருந்து எழுதப்படும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

minister thangam thennarasu talks book release event virudhunagar

 

விருதுநகரில்  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழாவில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும்போதுதான் உண்மையான வரலாற்றை அனைவரும் அறிய முடியும் எனப் பேசினார்.

 

அப்போது அவர்  “தன்னுடைய சுவடுகளை மிக அழுத்தமானதாகக்  கொண்டது விருதுநகர் மாவட்டம். வரலாற்றில் மைக்ராலாஜி பீரியட் எனக் கூறப்படும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  மக்கள் வாழக்கூடிய பகுதியாக, மக்கள் வசிக்கக் கூடிய பகுதியாக, அந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியில்,  இன்றைக்கும் விருதுநகர் மாவட்டம்  இருந்து வருகிறது.  நாகரிகம் தழைத்து செழித்து வாழ்ந்து வந்த நிலப்பரப்பாகவும் இருந்துள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளமாக உள்ளன. சோழர், பாண்டியர் காலங்களில் எல்லாம் விருதுநகர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் முழு வரலாற்றையும் கொண்டு வர வேண்டும் என நமது ஆய்வு மையம் முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளோடு விட்டுப்போன செய்திகளையும் ஒன்றாக இணைத்துக்கொண்டு, உண்மையான வரலாற்றை நாம் எழுத வேண்டும். நமது ஆதி அந்தம் முழுவதும் வெம்பக்கோட்டை தொல்லியல் அகழாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

 

இக்காலத்தில், தமிழ்நாடு முழுவதும் நல்ல வரலாற்று ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். அதிலும், பல இளம் ஆய்வாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பல புதிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து மத்திய தொல்லியல் ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்.  அதிலும் குறிப்பாக,  பொற்பனைக்கோட்டை பகுதியில் தொல்லியல் ஆய்வுகளை தமிழக அரசின் சார்பில்  செய்திட வேண்டும். வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யப்படும் போதுதான் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்.

 

எந்த நிலப்பரப்பில் இருந்து இந்தியாவினுடைய  வரலாற்றை எழுதுவது  முறையாக இருக்குமோ, அதை தென்கோடி பரப்பிலிருந்து இந்திய வரலாற்றை எழுதும் முயற்சியில் கரம் கோர்த்திருக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு துணை நிற்கவேண்டும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.