Skip to main content

'தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் கூப்பிய கரங்களுக்குள் கூர்வாள்'-அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!   

Published on 16/05/2022 | Edited on 17/05/2022

 

Minister Thangam Thennarasu Review to bjp annamalai

 

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ''அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தது தமிழகத்தில் கண்டனங்களை பெற்றது.

 

மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதை தொகுப்பில் வரும் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்' என்ற வரியை கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'ழ'  கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் தமிழகத்தில் வேகமெடுத்தது.

 

Minister Thangam Thennarasu Review to bjp annamalai

 

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழ்த்தாயின் 'தமிழணங்கு' ஓவியத்தை ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்தார். இந்நிலையில் இதற்கு போட்டியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே' எனவும், 'தமிழ் தாய்' எனவும் என குறிப்பிட்டு ஓவியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

thangam thennarasu

 

இந்நிலையில் அண்ணாமலையின் ட்வீட்டிற்கு கமெண்ட் செய்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ள 'ஸ' என்ற எழுத்தை குறிப்பிட்டுக் காட்டி, 'தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டிவிட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்' என சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.