Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Minister Senthil Balaji discharged

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.

 

அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அவருடைய காவல் அக்.13 ஆம் தேதி வரை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு மறுவிசாரணை அக்.31 ஆம் தேதிக்கு வர இருக்கிறது.

 

இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிறையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறை மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசெல்ல அறிவுறுத்தினர். அதன் காரணமாக இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்; தேதியை அறிவித்த திமுக

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
District Secretaries Consultative Meeting; DMK announced the date

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி காலை 11:30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

“தேர்தலில் திமுகவை ஆதரிக்கமாட்டோம்” - தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தலைவர்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Unless CM condemns aRasa, we will not field DMK in the elections says  V.J. Senthil Pillai

“வ.உ.சி குறித்து அவதூறு பேசிய ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்காவிட்டால்  நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டோம் என தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜெ. செந்தில்பிள்ளை, “ சில நாட்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவு படுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம்.

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக ஆ.ராசா பரப்பியுள்ளார். இது சுமார் இரண்டரை கோடி பிள்ளைமார் சமுதாயத்தினருக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆ.ராசாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசுவதைத் தடுக்க, தங்கள் கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறோம்.

வருகிற 25ஆம் தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டோம். அதன் விளைவை தேர்தலில் சந்திப்பார்கள். ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்தக் கட்சியினர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. கட்சி செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர். ” என்றார்.