Skip to main content

''இனி அவகாசம் நீட்டிக்கப்படாது'' - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Minister Senthil Balaji confirmed that the deadline will not be extended

 

அண்மையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சாரத் துறை தெரிவித்திருந்த நிலையில், இதற்கான சிறப்பு முகாம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் ஆதார் எண்களை மின் கணக்குடன் இணைத்து வந்தனர். இந்நிலையில் ஆதாரை மின் கணக்குடன் இணைப்பதற்கு கால அவகாசத்தை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக மின்துறை தெரிவித்திருந்தது.

 

Minister Senthil Balaji confirmed that the deadline will not be extended

 

இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இனி நீட்டிக்கப்படாது. இன்றுடன் அதற்கான அவகாசம் நிறைவடைகிறது. மொத்தமுள்ள 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மட்டுமே இன்னும் இணைக்கவில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'வதந்தியே... நம்பாதீர்கள்...'-மின்சார வாரியம் மறுப்பு

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 'It's rumour...don't believe...'-Electricity Board Denial

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அந்த தகவல் முற்றிலும் போலியானது, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. சமூக வலைத்தளங்களில் உலாவிய இந்தத் தகவல்கள் மின் நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்தநிலையில் அரசு சார்பில் மின்சார வாரியம் இந்த தகவலை போலியானது என மறுத்துள்ளது. '2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தியை தற்போது சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பகிர்ந்து வருகின்றனர். எனவே ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என பரவும் செய்தி வதந்தியே. தற்போது மின்கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்' என அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

துணி காயவைத்த கணவர் மீது பாய்ந்த மின்சாரம்; காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழப்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Electric shock on husband drying clothes; The wife who went to save also lost her life

துணி காயவைத்த கணவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில்  கணவனைக் காப்பாற்ற சென்ற மனைவி மீதும் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது மேல்சிறுவளூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் பைனான்ஸில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று தனது வீட்டில் வாசிங்மிஷினில் துவைத்த துணியை காயவைக்க சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியில் துணி எடுத்து போடும் போது ராமு மீது மின்சாரம் தாக்கி உள்ளது. அவர் கத்தியுள்ளார். இதனைப் பார்த்த ராமுவின் மனைவி சரளா, தனது கணவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் ராமு மற்றும் சரளா ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.