Skip to main content

1200 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு உறுதியளித்த அமைச்சர்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

Minister Senji Masthan has said  action will be taken get farmers due compensation

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கெங்கவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சீரக சம்பா மற்றும் பொன்னி நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்நிலையில், அந்த நெற்பயிர்கள் அனைத்தும் கடும் பனிப்பொழிவு காரணமாக திடீரென பூச்சிகள் தாக்கி சேதம் அடைந்துள்ளன.

 

அதைத் தொடர்ந்து, கெங்கவரம் கிராமத்தில் சாகுபடிக்குத் தயாராக இருந்த 1200 ஏக்கர் நெற்பயிர்களில் பூச்சு தாக்கியது குறித்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

விவசாயிகளிடம் இதுகுறித்து விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “கெங்கவரம் கிராமத்தில் சுமார் 400 ஹெக்டர் அளவிற்கு சாகுபடிக்குத் தயாராக இருந்த பொன்னி மற்றும் சீரக சம்பா நெற்பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் உட்பட மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினோம். நெற்பயிர்கள் வீணாகிவிட்டது என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆகையால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.