Skip to main content

“ஜாதிப் பெயரைவிட படிப்பின் பெயரை போட்டுக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Minister Meyyanathan says he is proud to say the name of the education rather than the caste

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்காக குழு அமைத்து கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி வகுப்பறைகளை சீரமைத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அந்தப் பள்ளியின்  செயல்பாடுகளைப் பாராட்டியதோடு முன்னாள் மாணவர்கள் அந்தப் பள்ளி வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் உள்ளனர். அதேபோல கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதமும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் மேம்பாடு அடையும்போது அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். எந்த ஒரு சூழலிலும் கல்வியை கற்றால் எதையும் சாதிக்கலாம்.

ad

ஒரு காலத்தில் தமிழகத்தில் நாம் பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் பயன்படுத்தினோம். இப்போது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயர் நீக்கப்பட்டு படித்த படிப்பின் பட்டங்களை பயன்படுத்துகிறோம். இந்த மாற்றத்திற்கு நாம் கற்ற கல்வி தான் காரணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். அதனால் அதிகமானோர் கல்வி கற்க காரணம். எப்போதும் அப்படிப்பட்ட கல்வியை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் சூழலில் மெய்யநாதன் என்ற பெயருக்கு பின்னால் இடம் பெற்றுள்ள MCA என்ற படித்த பட்டம் தான் உலக அளவில் எனக்கு பெயரையும், மதிப்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது. அதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல் மாணவர்களும் கல்வி கற்பதில் அதிக ஆர்வமுடன் செயல்பட்டு பெயருக்கு பின்னால் தாங்கள் படித்த பட்டங்களை போடுவதை பெருமையாக கருத வேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.