
கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கவி (வயது 19). மலசர் பழங்குடியின மாணவியான இவர், சமீபத்தில் நடந்த நீட்தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பழங்குடியின மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கு 108 முதல் 137 மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சங்கவி, 202 மதிப்பெண் பெற்றுள்ளதால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

சங்கவியின் தந்தை முனியப்பன் இறந்துவிட்டார். தாயார் வசந்தாமணி கண்பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி, தனது விடாமுயற்சியால் சாதித்து உள்ளார். சங்கவி நீட்தேர்வில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் அவர் வசிக்கும் கிராமத்தில் பிளஸ்-2 வரை படித்த முதல் மாணவரும் இவர் தான். அதேபோல், மலசர் பழங்குடியின மாணவியில் முதல் டாக்டராகும் சாதனையையும் படைத்திருக்கிறார். இந்நிலையில் மாணவி சங்கவிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஒரு மடிக்கணினியைப் பரிச அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)