Skip to main content

என்னய்யா திருவாரூர் மக்கள் மீது அமைச்சர் காமராஜிக்கு திடீர் கரிசனம் - கலாய்க்கும் நகர மக்கள்

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
po6

 

 "திருவாரூர்,திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் குறித்து யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் . ஆனால் அதிமுக அரசிற்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்துதான் வெற்றி தோல்வி அமையும்,"  என்றார் உணவுத்துறை காமராஜ்.

 

திருவாரூர் நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "திருவாரூர் நகர, ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறறோம். 

 

தஞ்சாவூர் – திருவாரூர் – நாகை  தேசிய நெடுஞ்சாலை இருவழிபாதை மாற்றம் செய்யும் பணிகள் நிர்ணயக்கப்பட்ட காலத்தை தாண்டி பணிகள் காலதாமத்திற்கு இருவழி சாலை என்பது மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது எனவே ஒரே பணியாக அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த துறை அமைச்சரிடம் பணிகளை விரைந்து முடிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. என்றார் .

 

அவரிடமே மேலும் திருவாரூர், திருப்பரங்குன்றம்  தொகுதி இடைத்தோ்தலில் திமுக அமோக வெற்றி பெறும் போல தெரிகிறதே என கேட்டதற்கு  "இந்த ஆய்வு பணிகள் பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பயணம் இதில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது. யார் எது வேண்டுமானலும் பேசுட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை பொது மக்களின் தேவைகளை பூாத்தி செய்வதே அதிமுக அரசின் நோக்கம் அதை வைத்தே வெற்றி தோல்விகள் அமையும் ". என அமைச்சர் காமராஜ் தொிவித்தார்.

திருவாரூர் மக்கள் மீது என்ன ஒரு திடீர் கரிசனம் அமைச்சர் காமராஜிக்கு என்கிறார்கள் நகரமக்கள்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் விபத்து; ஒருவர் பலியான சோகம்! 

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Thiruvarur district near Mannargudi Thiranagapuram incident

நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திக்கெட்டும் பரவவேண்டும்; கலைஞர் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணின் சமூக புரட்சி!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Daughter performed funeral rites for mother in Tiruvarur
யமுனம்மாள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் இராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மனைவி லெட்சுமி அம்மாள். இவர்களுக்கு பிறந்த சில ஆண், பெண் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துபோக மிஞ்சியது யமுனம்மாள் என்கிற ஒரு பெண்குழந்தை மட்டுமே. யமுனம்மாள் சிறுவயதில் இருக்கும் போதே, இவரது தந்தை ஆண்வாரிசுக்காக இன்னொரு திருமணம் பண்ணிக்கவா என்று லட்சுமி அம்மாளிடம் கேட்க அவரும் மனமுவந்து தனது உறவுக்கார பெண்ணையே இரண்டாம் திருமணம் செய்துவைத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து லட்சுமி அம்மாள் தனது மகள் யமுனம்மாளை 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்தார். பின்னர் லட்சுமியம்மாள் மகள் வீட்டிலேயே வசித்தார். இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ஜூன் 11 ஆம் தேதி லட்சுமியம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் லட்சுமியம்மாளுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. அப்போது லட்சுமியம்மாளுக்கு ஆண் வாரிசு இல்லாததால் யார் கொள்ளி போடுவது என்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சிலர் நாங்கள் செய்கிறோம் என்று முன்வர அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எனது தாய்க்கு நான்தான் ஒரே மகள் அதனால் நான் கொள்ளிவைக்கிறேன் என்று யமுனா முன்வந்துள்ளார். அப்போது ஊர் பெரியவர்கள் பெண்கள் மயானத்திற்கு வந்து கொள்ளி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். என் தாய்க்கு நான் கொள்ளிவைபேன் என்று ஆவேசமாக கூறிய யமுனா அதற்கான ஏற்படுகளை செய்யத் தொடங்கினார்.

Daughter performed funeral rites for mother in Tiruvarur

அதன்படி தாயின் இறுதி ஊர்வலத்தின் முன்பாக தீச்சட்டி ஏந்தியபடியே மயானம் சென்றார். எரிக்க தயார் செய்யப்பட்ட தன்தாயிக்காக பனிக்குடம், மண்குடம் உடைத்து  இறுதிச் சடங்கை நிறைவேற்றினார். யமுனம்மாள் இந்தச் செயலை அக்கிராம மக்கள், வெளியூரில் இருந்து வந்த உறவினர்கள், நண்பர்கள் பலரும் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்தனர். 

ஆட்சியதிகாரம் மூலமாக பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட தமிழ்நாட்டில் தான் இன்றளவும் பெண்களை மயனத்திற்கு வரக்கூடாது, ஆண் பிள்ளை இல்லாமல் இறந்துப்போன தங்கள் தாய் தந்தையருக்கு பென்கள் கொள்ளி வைக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் இறக்கும்போது, அவர்களுடைய பெண் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையருக்கு கொள்ளி வைக்க தங்களது உறவினர்களிடம் கெஞ்சும் நிகழ்வுகள் காணும் பொழுது இறப்பைத் தாண்டியும் அவர்களின் கெஞ்சல் மனதை உருக்க வைக்கும். ஆனால், கலைஞர் பிறந்த மண்ணில் காலத்தால் மறக்கமுடியாத சம்பவம் யமுனம்மாள் தனது தாய்க்கு இறுதி சடங்கு செய்துள்ளார். இது போன்ற நிகழ்வு திக்கெட்டும் பரவ வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என்கின்றனர் பெரியாரை பின்பற்றுவபவர்கள்.