Skip to main content

லண்டனில் பென்னிகுக் சிலையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022
j

 

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய வரும் பொறியாளருமான ஜான் பென்னிகுக் சிலை திறப்பு விழா லண்டன் நகரில் எளிமையாக  நடைபெற்றது. 


                    
இந்த  நிகழ்ச்சிக்கு விழா ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன். கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லண்டன் தமிழ் சங்க செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். சிலை திறப்பு விழாவிற்கு முன் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு பங்குத்தந்தை புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதன் பின்னர் கர்னல் பென்னி குக் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மாலை அணி வித்து மரியாதை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஜான் பென்னிகுக் சிலையை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார்.


                       
அதன் பின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது.... தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழக மக்கள் போற்றும் சிறந்த மனிதராக ஜான் பென்னிகுக் உள்ளார் அவர் முல்லைப் பெரியாறு அணையை கட்டாவிட்டால் தென் தமிழகம் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். குறிப்பாக தென் தமிழக மாவட்டமான மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் தேனி உட்பட பல மாவட்டங்கள் அவர் கட்டிய அணையால் பயன்பெற்றுள்ளன. ஆனால் மனிதநேயத்தோடு அவர் கட்டிய இந்த முல்லைப் பெரியாறு அணை அவர் மறைந்த பின்பும் அவருக்கு புகழைத் தேடித் தந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் லண்டனில் அவர் பிறந்த ஊரான கேம்பர்லியில் ஜான் பென்னிகுக் சிலையை திறந்து வைக்க வேண்டும் என உத்தர விட்டதால்  நாங்கள் வந்துள்ளோம். அவர் சிலையை திறப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.

 

இதில்  லண்டன் தமிழ் சங்க உறுப்பினர்கள் ஜேம்ஸ்ராஜ், அன்பரசு, கோவிந்தராஜு, செல்வன் நாகதேவன்,பிரேம்குமார் மற்றும் லண்டன் கோவண்டி கல்லூரி மாணவர் தமிழகத்தை சேர்ந்த, அம்பை கார்த்திக் ரவி ,உட்பட பலர் கலந்து கொண்டனர்


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.