jlk

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆப்ரேஷன் செய்தார். அதன்பின் ஒரு வாரம் கூட அவர் சரிவர ஓய்வு எடுக்கவில்லை. உடனே சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டி துவக்க விழாவுக்கு சென்றார். அதன் பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து தொகுதியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிவந்ததுடன் மட்டுமல்லாமல் மக்களின் குறைகளையும் கோரிக்கையையும் கேட்டு பூர்த்தி செய்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு பதறிப் போன உறவினர்கள் உடனடியாக மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததின் பெயரில் தற்போது உடல் நலம் குணமடைந்து வருகிறார். இந்த விஷயம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு தெரியவே உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து உடல் நலத்தைப் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர்.

அதோடு இந்த விஷயம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியவே அமைச்சரை பார்க்க மருத்துவமனைக்கு படையெடுத்தனர். ஆனால் அங்குள்ள அமைச்சரின் உறவினர்கள் இங்கு யாரும் அமைச்சரை பார்க்க வேண்டாம் வீட்டுக்கு வந்தவுடன் பாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இருந்தாலும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் ஆஸ்பத்திரியிலே முகாமிட்டு இருக்கிறார்கள்.