Skip to main content

கரோனா வார்டுக்கு சொந்த செலவில் ஜூஸ், காபி கொடுக்கும் அமைச்சர் 

Published on 26/07/2020 | Edited on 27/07/2020
PUDUKOTTAI

 

இந்தியா முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பேரை கடந்துவிட்டது. தொடக்கத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அரசு மருத்துவமனைகளில் அதிக கவனிப்புகள் இருந்தது. தற்போது எந்த வசதியும் இல்லை, கவனிப்புகள் குறைவாக உள்ளது. கழிவறை, தண்ணீர் பிரச்சனை உள்ளது என்று தமிழகம் முழுவதும் போர்குரல் எழுந்தது போல அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் எழுந்தது.

 

வார்டுகளில் இருந்து சொல்வதை படங்களுடன் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அனைத்தும் சீர் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அடுத்த நாளே மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியை ஆய்வுக்கு அனுப்பி உணவு தரம் கண்டறியப்பட்டது. குடிதண்ணீர் பிரச்சனையை போக்க அனைவருக்கும் அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த செலவில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் ஜூஸ், மற்றும் காபி வழங்கி வருகிறார். மேலும் அமைச்சர் சொன்னார் என்று மூன்றாயிரம் தண்ணீர் பாட்டில்களும் இறக்கப்பட்டு, ஒரு நாளைக்கு  2 பாட்டில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை வராமல் தடுக்க நகராட்சி சார்பில் ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் காவிரி குடிநீர், டேங்கர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை மையங்களில் உள்ள குறைகள் அமைச்சரின் கவனத்திற்கு சென்ற பிறகு ஓரளவு சரி செய்யப்பட்டு வருவதாக கிசிச்சையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.