Skip to main content

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

The Minister of Agriculture issued a housing lease to the public near Chidambaram

 

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசித்த பொதுமக்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின்போது 147 பேர் வீடுகளை இழந்தனர். இதனை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது. ஆனால் அதற்குப் பட்டா இல்லாமல் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.

 

அவர்கள், வருவாய்த் துறையினரிடம் கடந்த பல ஆண்டுகளாகப் பட்டா கேட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று அவர்களுக்குக் கிள்ளையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குக் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 147 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் 10 பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டை மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர், பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் 144-வது குருபூஜை விழா

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

Arumugam Navalar 144th Guru Puja Festival at Chidambaram

சிதம்பரம் மேல வீதியில் ஆறுமுக நாவலர் 144 வது குருபூஜை விழா அவர் தோற்றுவித்த சைவ பிரகாச வித்யாசாலையில் பஞ்சபுராண பாடல்களுடன் நடைபெற்றது. விழாவுக்கு ஆறுமுகநாவலர் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம ஷெம்போர்டு நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் செயலாளர் அருள்மொழிசெல்வன் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஒழுக்கம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், இந்த பள்ளியில் பயின்று பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நக்கீரன் சிஎன்சி கைடு நடத்திய பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஊடகவியலாளர் அ. காளிதாஸ் வழங்கினார். மேலும் மாநில அளவில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நடத்திய விண்வெளி ஆராய்ச்சி திட்ட மாதிரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஞானபிரகாசம் வடக்கு குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் கோவிலில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் மருத்துவர் நடராஜன், மரு.பத்மினி கபாலிமூர்த்தி முன்னிலையில் குருபூஜை நிகழ்வு துவங்கி, ஆறுமுக நாவலர் சிலையை, சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

Next Story

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.