Skip to main content

பெண்கள் தொல்லை தாங்க முடியவில்லை - கதறும் ஆண்கள் நலச்சங்கம்!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

 

men's

 

நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும், அவர்களின் முக்கியத்துவம் இந்த  சமுதாயத்திற்கு தேவை என்றும், அவர்களின் பங்கு சிறப்பாகவும், நன்றாகவும் உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் புகழும் இந்த சமயத்தில் கட்டிய மனைவி தொல்லையினால் ஆண்டுக்கு 10,000 ஆண்கள் தமிழ்நாட்டில் இறக்கின்றனர் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆண்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மனைவிமார்கள் கொடுக்கும் தொல்லையால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பத்தாயிரம் ஆண்கள் இறப்பதாக கூறி அதற்கு அரசு விசாரணை ஆணையம் வைக்க வேண்டும், ஆண்களுக்கென்று தனி அமைச்சகம் வேண்டும் மற்றும் இதுபோல பல கோரிக்கைகளை வைத்தனர். மேலும் பெண் காவல் நிலையங்களில் ஆண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், எப்படி பெண்களை விசாரிக்கும்பொழுது பெண் காவலர்கள் இருக்கிறார்களோ அதேபோல ஆண்களை விசாரிக்கும் பொழுது ஆண் காவலர்கள் இருக்க வேண்டும், ஆண்களை இப்படி பெண்கள் அடிமைப்படுத்தியுள்ளதை பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்று பெண்களுக்காக போராடிய தலைவர்கள் இருந்திருந்தால் இவர்கள் செய்யும் அராஜகத்தை பார்த்து வருத்தப்பட்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

     

men's


இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் கூறியது, பெண்கள் ஆண்கள் மீது கொடுக்கும் அவதூறு வழக்குகளை தவிர்த்திடவும், அவ்வாறு கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும் என்றும், ஆண்கள் தாங்கள் படும் கஷ்டங்களை வெளியேவந்து தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

"பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது" - புதுமடம் ஹலீம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Pudhumadam Haleem Interview

 

தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் பகிர்ந்து கொள்கிறார்.

 

நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என்பது அனைவருக்கும் தெரியும். எதிரில் பேசுபவர் யார் என்பதே அந்த ஆடியோவில் வெளியிடப்படவில்லை. இந்த ஆடியோ வெளியான பிறகு நடுநிலையாளர்கள் என்கிற போர்வையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் பேசினர். திமுக ஆட்சியின் மீது மிகப்பெரிய களங்கம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினர். உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்தன. 

 

இதற்கு பி.டி.ஆர் இரண்டு முறை விளக்கம் கொடுத்தார். இதுபோன்ற மூன்றாம் தர அரசியலுக்கு தான் பதில் தர விரும்பவில்லை என்றார். ஆனாலும் மீண்டும் மீண்டும் முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். அமைச்சரே இதற்கு பதில் கூறிவிட்ட பிறகு தான் இதுபற்றிப் பேசி அவர்களுக்கு விளம்பரம் தர விரும்பவில்லை என்று முதல்வரே தற்போது கூறிவிட்டார். இதன் மூலம் பி.டி.ஆர் பதவி விலகமாட்டார் என்பதை முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார். பி.டி.ஆர் ஒரு சிறந்த நிதியமைச்சர். திமுக ஐடி விங் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

 

ஜிஎஸ்டி கவுன்சிலில் மற்றவர்கள் கேட்காத கேள்விகளை பிடிஆர் கேட்பதால் அவரைப் பதவி விலக வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே முயல்கிறது. பல்வேறு நபர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவார்கள். 12 மணி நேர வேலை சட்டத்தை சில துறையினருக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்ததாக முதல்வரே சொல்லிவிட்டார். ஆனால் எதிர்ப்பு வந்ததால் சட்டத்தைத் திரும்பப் பெற்றுவிட்டார். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எப்படித் துணிவு வேண்டுமோ அதைப்போல அதைத் திரும்பப் பெறுவதற்கும் துணிவு வேண்டும். 

 

கோவில்களில் ஆடு மாடு பலியிடுவதற்குத் தடை விதித்து ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். மக்கள் கடுமையாக எதிர்த்தபோதும் பின்வாங்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு பின்வாங்கினார். அவரைப் போல் இல்லை முதலமைச்சர் ஸ்டாலின். தங்களுடைய தொழிற்சங்கமே இந்த சட்டத்தை எதிர்த்ததை எண்ணி நான் பெருமையடைகிறேன் என்றார் முதல்வர். வேளாண் சட்டத்தை விவசாயிகளின் ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு தான் பின்வாங்கியது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அப்படிச் செய்யவில்லை. 

 

பாஜக எப்போதுமே சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்ன பாஜக, இன்று கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச பால், சிலிண்டர் வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது எதையும் நம்ப முடியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. விலையுயர்ந்த கோட் அணியும் பிரதமர் தன்னை ஏழைத்தாயின் மகன் என்பார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை தான் இன்று இருக்கிறது. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது கர்நாடக மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இலவசங்களை அறிவித்துள்ளனர்.