A medical student caught in the lurch at Hidden camera in the bathroom

சென்னைராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்குகுடி வந்துள்ளனர்.

Advertisment

அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, அந்த பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவைவைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், குளியல் அறையில்சந்தேகத்திற்கு இடமாக ஒருபேனா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அது உளவுக்கருவி என்பதும் அதில் கேமரா இருப்பதும்அவர்களுக்கு தெரியவந்தது.

Advertisment

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன், ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். குளியலறையில், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.