Skip to main content

''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 the robber's confession of action!

 

சென்னையில் மருந்து கடைகளில் கொள்ளையடித்த கொள்ளையன் ஒருவனை போலீசார் கைதுசெய்த நிலையில், சக்கரை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்துவதற்காக மருந்து கடைகளில் குறிவைத்து திருடியதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் கடந்த 29ஆம் தேதி பணம் மற்றும் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் குமரன் காலனி, மேற்கு மாம்பலம் எத்திராஜ் நகரிலுள்ள மருந்து கடைகளில் இதேபோல கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து புகார்கள் போலீசாருக்கு செல்ல, சைதாப்பேட்டை உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மற்றும் அதன் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

 

 the robber's confession of action!

 

அதில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிங்கி என்கிற அருண்குமார் என்ற இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமாரை போலீசார் கைதுசெய்து விசாரித்தபோது, சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மாத்திரையை 8 முதல் 10 வரை எடுத்து நீரில் கரைத்து, சிரஞ்சு மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்த பிங்கி அருண்குமார், மருந்து கடைகளில் பணத்தைக் கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட அந்த மாத்திரையையும் கொள்ளையடித்துள்ளான்.  

 

அந்த மாத்திரைகளை அவன் பயன்படுத்தியதோடு சிலருக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் அருண்குமார் திருடுவதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதை அறிந்த போலீசார், வாகனத்தை திருடி தந்த டாட்டூ பாபு என்ற நபரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருண்குமாரை, காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்