medical admission; Consultation starts today

அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டிருந்தது. வெளியான அறிவிப்பின்படி வரும் இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய இடங்களுக்கான இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 5-ல் தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை அகில இந்திய இடங்களுக்கு மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 11-ல் தொடங்கி செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அக்டோபர் 1-ல் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.