Skip to main content

கரோனாவிலிருந்து குணமடைந்த கே.பாலகிருஷ்ணன்!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

marxist communist party balakrishnan coronavirus negative discharged govt hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கரோனா உறுதியான நிலையில், கடந்த 12- ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கே.பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

 

இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த கே.பாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். சிறந்த முறையில் சிகிச்சை அளித்த டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.பி.எம். வேட்பாளர்கள் அறிவிப்பு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
CPM Announcement of candidates

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் ஒரு மக்களவை தொகுதி உட்பட 10  தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில்  ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story

எஸ்.பி.ஐயை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிதி பெற்ற கட்சிகளின் விவரத்தையும், கொடுத்தவர்கள் விவரத்தையும் வெளியிடுவதற்கு மாறாக ஜூன் 30 வரை அவகாசம் கேட்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம் ஸ்டேட் பாங்க் வட்டார தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.