தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளிலும், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தி.நகர் வேளாங்கண்ணிமெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி நீலாங்கரை சென்னை மாநகராட்சி பள்ளியிலும் வாக்களித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார். மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன் ஆகியோர் சென்னை கொளத்தூரில் வாக்களித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-12_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-0_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-8_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-5_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-3_40.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-1_61.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th_60.jpg)