Skip to main content

அஞ்சாதே... போராடு...! - போராட்டக் களத்தில் நடந்த திருமணம்!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

நாடு முழுக்க தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது தான். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தொடர் போராட்டமாக நீடித்து வருகிறது. அதே போல்  இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கூடாது என தமிழக சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

 

marriage held in erode caa against meeting

 



ஈரோட்டில் செல்ல பாஷா வீதியில் இஸ்லாமியர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 16-வது நாளாக நீடித்தது.  இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை போராட்ட களத்தில் வைத்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷாவுக்கும்,  மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதாவுக்கும் போராட்ட பந்தலிலேயே திருமணம் நடைபெற்றது.  

மணமக்களை அங்கிருந்த ஏராளமானோர் வாழ்த்தினர். பின்னர் இனிப்பும்,  இரவு விருந்தும் போராட்ட பந்தலில் வழங்கப்பட்டது.  மணமக்கள் இருவரும் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி ஏ.ஏ, என்.பி.ஆர்,  என்.ஆர்.சி,  என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று 16-வது நாளாக  இஸ்லாமியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்தது. இதில் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.