Skip to main content

கரோனாவால் தள்ளிப்போன திருமணம்? தற்கொலை செய்து கொண்ட மாப்பிள்ளை!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020


 

  veppur - Cuddalore district -



கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஆவட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் சின்னத்தம்பி (28 வயது). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் சின்னதம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து சின்னத் தம்பிக்கு பிடித்த ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிவு செய்தனர். இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடத்துவது என இருவீட்டாரும்  முடிவு செய்தனர்.


இதற்கிடையே கரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் மிக சிறப்பாக நடத்த வேண்டிய திருமணத்தை உற்றார் உறவினர்கள் இல்லாமல் எளிமையாக நடத்துவதற்கு விருப்பம் இல்லாததால் இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடத்துவது என பேசி முடிவு செய்தனர்.

இந்தநிலையில் மணமகன் சின்னத்தம்பி தனக்கு உடனே திருமணம் செய்து வைக்கக்கோரி, தனது பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணமகன் சின்னத்தம்பி அவரது கிராமத்திலுள்ள மூப்பனார் கோவில் பின்புறமுள்ள வேப்பமரத்தில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 


இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலை செய்துகொண்ட சின்னத்தம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கரோனாவால் தனக்கு நடக்க வேண்டிய திருமணம் தள்ளி வைக்கப்பட்ட விரக்தியில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவ்வூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.