
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அடரி அருகேயுள்ள கீழ் ஒரத்தூர் கிராமத்தில் வசிப்பவர் மாயவேல். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 30).
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று (21.01.21) காலை கிராமத்திற்கு அருகேயுள்ள அவரது கிணற்றில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்ட கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர்அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் சிறுப்பாக்கம் காவல்துறையினர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திட்டக்குடி காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)