
திருச்சி - கல்லணை சாலையில் பொன்னி டெல்டா எதிர்ப்புறம் காவிரி ஆற்றின் கரையோரம் ஆண் சடலம் ஒன்று மிதந்துவந்தது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் ஸ்ரீரங்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த உடலை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர்.
இறந்து கிடந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஆனால் அவர் யார்?எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் ஆற்றில் குதித்து இறந்தாரா? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)