Published on 30/01/2021 | Edited on 30/01/2021

இந்திய அரசு கடந்த 2016- ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வழங்கிய காந்தி சிலை, கலிஃபோர்னியா மாகாணத்தில் நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 28- ஆம் தேதி இந்த சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு இந்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்காவில் காந்தி சிலை மண்ணில் வீழ்த்தப்பட்டது கண்டு மனம் உடைகிறேன். உலகமெல்லாம் காந்தியை மாற்றி மாற்றிக் கொல்லலாம். ஆனால், ஒருபோதும் அகிம்சை சாவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.